Friday, September 17, 2010

புன்னகை

நீ
இல்லாத போது,
“இனி உன்னைக்
காதலிக்கக்கூடாது”
என்று சத்தியம்
போடுகிறது
இந்த மனம்..

பாவம் அதற்கு
தெரியாது
போலும்..
உன் ஒற்றைப்புன்னகை
ஒராயிரம் சத்தியங்களை
தகர்த்து விடும்
என்று!!

புன்னகைக்குப் பின்னால்...

புன்னகைக்குப் பின்னால்...
புரியாமல் போனதடி
பெண்ணே...
உன்
புன்னகைக்குப் பின்னால்
என் எதிர்காலம்
என்னவாகுமென்று

பிரியும் தருணம்!

உன்
பிரிவின் வலியைத் தாங்கும்
வலிமை எனக்கில்லை!

உன்னை
பிரியும்போது தான்
என்னையே இழக்கிறேன் - நான்!

நீ
என்னுடன் இருக்கும்
நேரம் மட்டும்
அப்படியே இருந்துவிடாதா?
என்னை
கடந்து செல்லும்
ஒவ்வொரு விநாடியும்
உன்னையே நினைக்க செய்கிறது.

என்
செல்போனைக் கூட
நொடிக்கொரு முறை
பார்க்கிறேன்,
உன்னிடமிருந்து
SMS வராதா என்று!

நேரங்களும் ஓடியது.
நாட்களும் சென்றது.
நீயும்
என்னை விட்டு
ஒரு நாள் சென்று விடுவாய்.
இனி
உன்னை பார்ப்பது எப்போது?

பழகிய நாட்கள் அனைத்தும்
பசுமையாகவே என் நெஞ்சத்தில்
நிறைந்திருக்கும்.

உன் நினைவுகளை
சுமந்து கொண்டு,
என்றாவதொருநாள் உன்னை
சந்திப்பேன் என்ற
நம்பிக்கையோடு
காத்திருப்பேன்!

சில கிறுக்கல்கள் இங்கே



என்னிடமிருந்து

உங்களுக்காக......

அவை

அர்த்தமுள்ளதா?.........

அழகானதா?...........

கேள்விகளின் பதில்கள்

உங்களை சார்ந்தே..

இருந்தும் ...


மையின்றி....

கணிணியின் தட்டச்சில்......

உங்களுக்காக

கிறுக்க விரும்புகிறேன்

தமிழுக்கான என் நேசமும்

எனக்கான உங்கள் புரிதலும்

கலந்து......

இந்த கவிதை தோட்டம்

உங்களுக்காக

பூக்கிறது....

வசந்த காலங்களில்

மட்டும அல்ல

இலையுதிர் காலங்களிலும் கூட.

உங்களுக்காக எப்பொழுதும்.

பாகபிரிவினை :

அமைதியாக முடிந்தது
பாகபிரிவினை...

அசையா சொத்துக்களும்
அசையும் சொத்துக்களும்
யாரு யாருக்கு என்று,,,,

பிரச்சினை
அம்மா அப்பா வில் தான்..

முடிவுக்கு வராமல் தவித்தார்கள்..
குல விலக்காய் வளர்ந்த மகள் வந்தாள்
சுமூகமாய் பிரித்தால்...

அம்மா அமெரிக்காவில் இருக்கும் அண்ணனுக்கு
அப்பா சென்னையிலிருக்கும் தம்பிக்கு
என்று..
பிரித்தது அம்மா அப்பா வை மட்டுமல்ல
மனித நேயத்தையும் தான்...

கனவுவிழிகள்

கனவுவிழிகள் தேடும் போது
மறைந்தவள்
இமைகள் முடியவுடன்
வருகிறாள்
கனவில்...

சிரிக்கும் பூக்கள்!

மழைக்குளியல்
மன மகிழ்ச்சியோ?
கூடையில்
சிரிக்கும் பூக்கள்!

தொட்ட நினைவு

தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.

வாழ்த்து அட்டை

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை

தண்டனை........'


நேரில் பார்க்கயிலே
ஓடி ஒளிந்து கொண்டவள் நீ

சிறிது தூரம் சென்றதும்
என்னை திரும்பி பார்த்தவள் நீ

நான் இங்கிருக்க
என் மனதை திருடியவள் நீ

சின்ன சிரிப்பால்
என்னை சிறைவைத்தவள் நீ

கொள்ளை அழகால்
மனதை கொள்ளை கொண்டவள் நீ

அனைத்தும் செய்தவள் நீ
தனிமை தண்டனை மட்டும் எனக்கா?

நட்பு

"எனக்கு மட்டும்"
என்று குவிகிற மையத்தையே
காம்பாக்கிக் கொண்டு
"வெளி"
வாங்கிப் பூக்கிறது
நட்பு

Monday, September 6, 2010

வறுமை



மகிழ்ச்சியோடு மழலைகள்
பள்ளிக்கு சென்றன ...


சத்துணவு.............

சத்தியம்

நீ
இல்லாத போது,
“இனி உன்னைக்
காதலிக்கக்கூடாது”
என்று சத்தியம்
போடுகிறது
இந்த மனம்..

பாவம் அதற்கு
தெரியாது
போலும்..
உன் ஒற்றைப்புன்னகை
ஒராயிரம் சத்தியங்களை
தகர்த்து விடும்
என்று!!

காத்திருக்கிறேன்

என் கவிதைகளை ரசித்துக்கொண்டிருக்கையில்
இது யாருக்காக என்று நீ கேட்கும்போதெல்லாம்
என் இதயம் துடிக்கிறது
உனக்காக தான் என்று சொல்லடா என..!!

சொல்லிவிடுவேன்..
ஆனால் எனக்காகத்தானே
என நீ கேட்கும்வரை காத்திருக்கச்சொல்கிறது மனது..!!

நினைத்துக்கொள்வது...!

உன்னை
நினைத்துக்கொண்டிருப்பதைப்
போலவே
இன்பமாய் இருக்கிறது.
நீயும் என்னை
நினைத்துக்கொண்டிருப்பாய்
என நான்
நினைத்துக்கொள்வது...!

பெண் குழந்தை




கண்ணின் மணி போல எனை
கருவறையில் காத்தவளே
பூமிக்கு நான் வந்தவுடன்
புலம்புவது ஏனம்மா?

பெண்ணென்ற கலக்கமா,
பெற்றவளே உன்நெஞ்சில்!

கள்ளமில்லா என் தாயே -உன்
உள்ளம் நினைப்பதென்ன...

நெல்லின் மணி கொண்டு
நெஞ்சை நிறுத்தவா...

கள்ளிப் பால் வார்த்து
கல்லறை படைக்கவா...

வேண்டாம் தாயே
விபரீத எண்ணம்
அள்ளி அணைக்க
மனமில்லையென்றால்
அரசுத் தொட்டிலில்
போட்டுவிடு..!

Thursday, September 2, 2010

தொலைக்காதே உன்னை




யாரும் எதையும்
மறந்து போவதில்லை
மறதிக் குவியலுக்குள்
புதைந்து கிடப்பதை
கிளறிப் பார்க்கத்தான்
விரும்புவதில்லை

சிலர்தான்
கிளறிக் கிளறி
கிளர்ந்தெழுகிறார்கள்

சிலரோ
உருகி உருகி
அழுது வடிக்கிறார்கள்

இன்னும் சிலரோ
பொருமிப் பொருமி
போரிடத் துணிகிறார்கள்

பெண்ணே..! நீ
கிளர்ந்தெழு
அழுவதை மறந்திடு
போரிடவும் துணிந்திடு

யாரும் ஏதும் சொல்வார்களேயென்று
நாணிக் கோணி வீணே நிற்காதே

திணிப்பதற்கென்றே திரிவார்கள்
குறை பிடிப்பதில்
கண்ணாய் இருப்பார்கள்
கணப் பொழுதில் உன் மனதை
கலைத்தும் விடுவார்கள்

தொலைக்காதே உன்னை
தொலைத்து விடு உன்
மனதைக் கலைப்பவரை

தொலைத்து விடு
பெண்ணென்று விழிப்பவர்களை
பூவென்று நுகர்பவர்களை
கண்ணென்று கதை பேசுபவர்களை
இன்னும் சொல்லி ஏய்ப்பவர்களை...