Friday, August 27, 2010

ஆசை...

ஆசை... - வாழ்க்கை கவிதை

தோண்ட தோண்ட

நீர் சுரக்கும்
உற்று நீர்
"ஆசை...!"




யாரோ..???

பூட்டிய பூட்டிற்க்குள்

மாட்டிக்கொண்ட
சாவியை போல்
சிக்கிக்கொண்டேன் உன்னிடம்...
காதலை சொல்லவும்
முடியவில்லை
மறைக்கவும்
முடியவில்லை..

உனக்கும்,
எனக்கும்
வலிக்காமல் இதை
உடைக்கப்போவது
யாரோ..???





நான் கவியாக...!!!

நீ என்னை பார்த்துவிட்டு

போகும்பொழுது
நான் வானமாக மாறியிருப்பேன்
நீ நட்சதிரங்க்களாக நிறைந்திருப்பாய்...!!

நீ என்னிடம் பேசிவிட்டு
போகும்பொழுது
நான் புத்தகமாக மாறியிருப்பேன்
நீ வார்த்தைகளாக மாறியிருப்பாய்....!!

நீ என்னிடம் சண்டையிட்டு
செல்லும்பொழுது
நான் உதிர்ந்த இலையாக வீழ்ந்திருப்பேன்
நீ மரமாக மாறியிருப்பாய்....!!

நீ என்னிடம் சமாதானம்
ஆகும்பொழுது
நான் பக்தனாய் மாறியிருப்பேன்
நீ கடவுளாக மாறியிருப்பாய்...!!

நான் உன்னிடம் என் காதலை
சொன்னபொழுது
நீ காணாமல் போயிருந்தாய்
நான் கவியாக மாறியிருந்தேன்...!!!






உன் வருகைக்காக ..........

Ethirparpu - Others


யார் தட்டிய போதும் திறக்காத
என் மனக்கதவு நான் தட்டியும்
உடையாமல் உன் நினைவில்
ஒட்டிக்கொண்டிருக்கின்றது
உன் வருகைக்காக ..........?

இந்த நிமிடம்

Eakam - Others


இந்த நிமிடம் நமக்காக மட்டும்
மெல்லிய காற்றின் ஒலி கூட
நமக்காக தனிமையை களைக்க வேண்டாம்
இறுதியாக ஒரு முறை ........
என்னை உன் மடியில் தூங்க விடு
உன் கண்ணீர்த் துளிகள்
என் கன்னத்தில் வழியட்டும்
அதற்காக ஒரு முறை
அழுது விடு ..........

என் காதலி..!!!

என் காதலி..!!! - காதல் கவிதை

நண்பன் நான் என்று
தோள்களின் மீது
சாய்ந்து கொண்டு
அழுகிறாள்
என் காதலி
தன் காதலனை
நினைத்து...!!!








குழந்தை தொழிலாளர்

ஓலைக்குடிசை ஓட்டை

வழியே எட்டிப் பார்த்து
தம் வீட்டினுள் நிலவை
சிறைபிடிதோம் என்று
குதூகலிக்கும் குட்டிக்
குன்றுகளை மண்வெட்டியால்
மட்டப்படுத்தும் மானுடங்களே
உங்களின் மனம் பிணமாகிப் போயிற்றோ?

பிஞ்சு கைகளில்
நஞ்சை தடவி
பணியில் பிணிக்கும்
சூட்சமன்களே...
பிஞ்சுகள் ஒரு முறை
தீண்டினால்,
சூட்சமங்கள்
வீழுமடா....

உன்னுடைய பசிக்கு
ஏன் அரும்புகளின்
இரத்தத்தை உறிஞ்சுக்
குடிக்கிறாய்?
உன் தாகத்திற்கு
அவர்களின் வியர்வைதான்
தண்ணீர் குளமா?

உங்களால்தான்
அவர்களைக்கண்டாலே
சரஸ்வதி,
வெண்டாமரையை
படகாக்கி, வீணையை
துடுப்பாக்கி விலகி
விரைகிறாள்....

பட்டாம்பூசிகளாய்
சுற்றித் திரியும்
சிட்டுகளைச் சிறைபிடித்து
பட்டாசுகளுக்கு
பந்திவைக்கிறீர்களே?

திக்கெட்டும் தித்திக்கும்
அத் தீபாவளிகளை
சிறு தீப்பெட்டிக்குள்
சிறைவைக்கும்
சிற்றின்பம் என்னவோ?

அனுதினமும் உங்கள்
அடுப்பெறிய அவர்களின்
வீட்டுக் கூரைகளை
வேய்வது என்ன வாடிக்கை?

அடுப்பினுள் சிக்கிக்
கரியோடு சாம்பலாகும்
அந்த கண்ணன்களுக்கு
புல்லாங்குழல்
ஊதவேண்டம்...

அவர்களின் மூச்சுக்குழலை
புண்ணாக்காமல் இருந்தால்
போதும்.......




முகம்...!!!

முகம்...!!! - காதல் கவிதை

மாதம் ஒருமுறை

வளர்பிறை,
தேய்பிறை வரும்.

என் வாழ்வில்
தினமும்
நீ
என்வீட்டு ஜன்னலை
கடப்பதால்..!!!





மயவள்

என் இரவுகளை இறக்க

செய்ய உறுவான ஓர் மங்கை ....!!
என் அனல் விழியில்
ஓடுது தினம் நூறு கங்கை
நிலவோடு அவளை நான்
...சேர்த்துக்கொள்ள வில்லை
என்னை உயிரோடு எரியூட்டும்
ஒரு விதமான பெண்மை ......!!


அனாதை

அனாதை - வாழ்க்கை கவிதை

இயற்கையை கண்டு ரசிக்கிறேன்

வீட்டிற்கு செல்ல மனம் இல்லாமல்
ஏனென்றால் நாங்கள்
அனாதை


அனாதை..!!!!

பேருந்து

பயணத்திலோ

மதுவின்
மயக்கத்திலோ

திருவிழா
கூட்டத்திலோ

நண்பனின் விளையாட்டு
தள்ளளிலோ

இப்படி
நான் தவறி
விழுந்த பொழுதெல்லாம்,
முகம் தெரியா யார் யாரோ
என்னை தூக்கிவிட,

நான் விழுந்த பொழுதெல்லாம்
"அம்மா" என்று
உன்னைத்தானே அழைத்தேன்

நீ எங்கே...????????????





அப்பா

மலர் என்று சொல்லுவதை விட

‘பூ’ என்று சொல்லும்பொழுது அதன் அருகாமை அதிகமாகிறதா?
அது போலத்தான் தந்தை என்ற சொல்லை விட
அப்பா என்ற சொல்லில் பாசம் அதிகம்.





அம்மா

என்னை இந்த உலகுக்கு

அறிமுகபடுத்தியவள் . . .

என் முதல்
தோழியும் கூட . . .

என் செல்ல
குறும்புகளை
செல்லமாய்
திட்டியபடி
ரசிப்பவள் . . .

இந்த உலகத்தில்
ஒருவர் மட்டுமே
உனக்கு துணையென
இறைவன் சொன்னால்
இவள் தான்
என்
இனிய
துணை . . .

அம்மாவின்
அன்புக்கு
இணை
என்றுமே
உலகில் இல்லை . . .





நட்பு கவிதை

நட்பு கவிதை - நண்பர்கள் கவிதை

வானமும் பூமியும் இறைவணின் சொத்து,
இன்பமும் துன்பமும் மனிதரின் சொத்து,
நீயும் நானும் கடவுளின் படைப்பு,
என்றும் பிரிய கூடாது "நம் நட்பு'

"கண்ணில் ஒரு மின்னல்"
"முகத்தில் ஒரு சிரிப்பு"
"சிரிப்பில் ஒரு பாசம்"
"பாசத்தில் ஒரு நேசம்"
"நேசத்தில் ஒரு இதயம்"
அந்த "இதயத்தில் என் நண்பன்/தோழி நீ"


காதல்

காதல் - காதல் கவிதை

4 கண்கள் சந்தித்து
3 காலமும்
2 இதயங்கள் அனுபவிக்கும்
1 வலிதான்
--காதல்--


உன் பாதையில் எதை மிதிப்பது ? எதை தவிர்ப்பது ?

en_pakkam_image1

உன் பாதையில் விஷச்செடிகளா ?

நிறையக் காண்பாய்


எதை மிதிப்பது ?
எதை தவிர்ப்பது ?


உன்னை அளந்திடு
பாதை புரிந்திடு
செடிகள் புரியும்

சில சமயம்,
மிதிப்பதை தவிர்ப்பாய்
தவிர்ப்பதை மிதிப்பாய்


நின்று விடாதே
திரும்பிப் பார்


வந்த பாதை நீளம் தெரியும்
மேலும் ஒரு அடி சுலபம்
இதை அது உணர்த்தும்...

நட்பா? காதலா?

en_pakkam_image1

நட்பு பெரிதா ? காதல் பெரிதா ?

நண்பன் கேட்டான்

நான் முதலில் கற்றுக் கொண்டது
நட்பு தான்

நான் இது வரையில் காத்து வருவது
நட்பு தான்

என்னை நானாக பார்த்தது
நட்பு தான்

காதலின் இனிமையான பாகம்
நட்பு தான்

எனினும்
எனக்கு என்னை அறிமுகப்படுத்தியது
காதல் தான்
எனவே,
நட்பின் காதலும்,
காதலின் நட்பும்.

இவளுக்கு இவன்

en_pakkam_image1

என்றாவது ஒரு நாள்



இவளுக்கு இவன் பிடிக்காமல்


போகுமானால்

இவனின்

அந்த கனம் முன்பே


மௌனம் நிரந்தரமாகட்டும்

கனவுகளை காப்பாற்ற

en_pakkam_image1

கனவுகளே காணத் தெரியாமல்
இருந்த காலமுமுண்டு.
ஆசை துகள்களாக ஆரம்பித்து
கனவுகளாக உருவெடுத்தது.
கனவுகள் காலப் போக்கில்
லட்சியங்களாக மாறிக்கொண்டது.
வாழ்க்கைப் பாதையில் சேர்ந்தபின்
லட்சியங்கள் வடிவம் பூசப்பட்டது.
.
.
.
பல இன்பங்களை விட்டுக்கொடுத்து
எண்ணங்களை மாற்றியமைத்து
உடலை காயப்படுத்தி
உணர்வுகளை ஒருமுகப்படுத்தி
சொந்தங்களை தூரதள்ளி
நம்பிக்கையை தன்வசப்படுத்தி

என் சிந்தனைக்கு மட்டும் மதிப்பளித்து
வளர்ந்த பாதைக்கு முற்றுப்புள்ளியிட்டு
.
.
.
மீண்டும் விதையாகி, வேருன்றி,
கிளையிடத் துவங்கிவிட்டேன்...

மழையே மழையே

en_pakkam_image1



,
உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
ஏ தெரியுமா,
நா இருக்கிற எந்த நிலையிலும்
எம் மேல அவ்வளவு உரிமையோடு வந்து
விழுகிறது நீ மட்டுந்தா!....

வேர்கள்

உறவுகளை அறிமுகப்படுத்தி,

உயிரை உணரவைத்து,
காதலைக் கற்றுக்கொடுத்து,
நட்பை சொந்தமாக்கி,
தோல்விகளை தூரத்தள்ளி,
வெற்றிக்கு வடிவமைத்து,
சதையை உடலாக்கி,
உணர்வை உயிராக்கி,

என்னை நானாகவும்,
என்னை நீங்களாகவும்,

பார்க்கும் உங்களுக்காக மட்டும்
எனையும் மாற்றிக்கொள்வேன்

இன்றைத் திங்கள் நாளைக்கும் பூக்குமென்று..

கடல் வழிக் கப்பலுக்கு தெரியுமா

எந்த அலை தன்னைத் தொடும் என்று?
எது கிழக்கு, எது மேற்கு என்று?

கடல் வழிக் கப்பலுக்கு தெரியுமா
நேற்றைய போலாரிஸும் இன்றைய தென் துருவமும்?

கால அலைகளின் ஆட்டங்களில்
மானுடர்களின் வாழ்க்கைக் கனவுகள்.
எந்த அலை அடிக்கும்,
எந்த அலை தாலாட்டும்?

இன்றைக்கு முளைக்கிற வெள்ளி
நாளைக்கும் என்று
கைக்கெட்டா விண்மீனாய் ஒளிரும் நம்பிக்கைகள்.

தாய் வழித் தோன்றல்

என் பட்டங்களை நீ

சுவரில் மாட்டியதில்லை.
என் தோல்விகளால் என்னைத்
துவள விட்டதில்லை.
என் பசியும் ருசியும்
என்னை விட உனக்கே தெரியும்.
என்றாலும்,
என் வாழ்க்கை அமைய
நீ வழியே சொன்னதில்லை.
உன் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதினும் பெரிதே
செய்தாய்.

என் மக்களின் பட்டங்கள்
சுவர்களில் சட்டங்களில்.
ஆனாலும் தோல்விகளால்
அவர்களைத் துவள விட்டதில்லை.
என் மகள்களின் பசியும் ருசியும்
அவர்களை விட எனக்கே தெரியும்.
என்றாலும்
அவர்கள் வாழ்க்கை அமைய
நான் வழியைச் சொல்ல மாட்டேன்.
என் மக்களுக்கு
ஒவ்வொரு நொடியும்
ஈன்ற பொழுதும் பெரிதாய்ச்
செய்வதை விட
வேறென்ன இருக்கிறது?

Wednesday, August 18, 2010

தூரம் கூட இனிமைதான்!!

நிலவு கூட தூரம் தான்
கண்ணுக்குக் குளிர்ச்சியாய் இருக்கிறது..

நம் உறவு கூட தூரம் தான்
பேச இனிமையாய் இருக்கிறது..

அந்தி வானமும் தூரம் தான்
பார்க்க கலையாய் இருக்கிறது..

அலைச்சல் கூட இன்பம் தான்
தொலைபேசியைப் பார்க்கும் பொழுது

என் மனம் கூட மென்மை தான்
உன் குரலைக் கேட்கும் போது

இரவு கூட பகல் தான் - நான்
உன் எண்ணத்தில் மிதக்கும் போது

மௌனம் கூட இனிமை தான்
உன் நினைவு என்னை வாட்டும் போது..!!

என் காதல்!!

என் காதல் மழை தூரலில்
மலர்ந்து பின்பு மறையும்
வானவில்லும் அல்ல..

மாதம் ஒரு முறை
மலர்ந்து பின்பு தேய்ப்பிறையாகும்
நிலவுமல்ல..

என்றோ ஒரு நாள் வந்து
தன் வீரத்தைக் காட்டி செல்லும்
புயலுமல்ல..

என் காதல்
அழிவில்லாத
ஆழமான கடல் போன்றது

அன்பே..
அதனைக் குமுற செய்து விடாதே..!!

உனது முகம்..

எனது விழியினில் - உனது
முகம் வர மறுப்பது ஏனோ..??

உனது அடர்ந்த இரு விழி புருவங்கள்
கூர்மையான உன் விழி பார்வை - என்
நினைவில் உலா வர..

உனது நேர் நாசி - என்
சிந்தையை ஆட்கொள்ள

உனது இதழ் - அதன் வளைவு
என் எண்ணத்தில் குடி கொள்ள

இவை அனைத்தும்
ஒரு சேர கலவையான - உன்
அழகிய முகம் மட்டும் - ஏனோ
என் விழிகளில் வர மறுக்கின்றது..!!

விழிகளை மூடி தவம் கிடக்கின்றேன் - உன்
தெளிவான முகம் தெரியுமென்று
பதில் ஏனோ - எனக்கு
தோல்வி தான்...!!!

ஐம்புலனாய் நீ

பார்வை

நான் பார்த்தபோது
நீ பார்க்கவில்லை.
இன்று
நீ பார்க்கிறாய்
என் விழியில்
பார்வையில்லை..

சப்தம்

நான் அழைத்தபோது
நீ கேட்கவில்லை..
இன்று
நீ அழைக்கிறாய்
என் செவியில்
சப்தமில்லை..

மொழி

நான் சொன்னபோது
நீ ஏற்கவில்லை.
இன்று
நீ எதிர்பார்க்கிறாய்
என் இதழில்
மொழியில்லை

உணர்வு

நான் தொட்டபோது
நீ உடன்படவில்லை..
இன்று
நீ தொடுகிறாய்
என் உடலில்
உணர்வில்லை..

சுவாசம்

நான் நுகர்ந்தபோது
நீ நகர்ந்துவிட்டாய்
இன்று
நீ அருகிலிருக்கிறாய்
நான் பிணமாகிவிட்டேன்...!!

பௌர்ணமி நிலவு


ஏய் பௌர்ணமி நிலவே...
நீ மட்டும் இவ்வளவு
அழகாய் ஜொலிப்பதேன்,,??

உன்னைப் பார்க்கையில்
எனக்குள்
பொறாமை தீ
எரிகிறதே..

ஆண்டுகள்
ஆயிரம் கடந்தும்
நீ மட்டும்
இளமையாய் துள்ளுவதேன்..??

உன் காதலன் எவனோ..
அவனுக்காய் காய்கிறாயோ..
அதனால்
கன்னம் சிவக்கிறதோ..??

ஜொலிக்கும்
உன் பேரழகை - நானும்
தான் கேட்கிறேன்
கடனாய்

கறுப்பாய் தாஜ்மஹால்

கறுப்பாய் தாஜ்மஹால்

எத்தனை முறை

வெள்ளையடித்தாலும்

காதல் புரியாதவரை

கறுப்பாய்தான் தாஜ்மஹால்!!

Tuesday, August 17, 2010

சொல்ல வந்த காதல்.! *


எத்தனை முறை உன்னிடம்
என் காதலை சொல்லி இருக்கேன் தெரியுமா..?
உனக்கு தெரியாது......
உன் நிழலிடம் கேட்டுப்பார்..

*

உன் முகத்தை பார்த்து சொல்ல தைரியம்
இல்லாத நான் எனது காதலை
எத்தனை முறை பாதியிலேயே
கொட்டிவிட்டு சென்று இருக்கேன்
தெரியுமா உனக்கு.?

*

எனது வீட்டு ரச கண்ணாடி
என்னை காதலிக்கிறதாம்
உன்னிடம் நான் காதலை
சொல்லுவதற்கு முன் ஒத்திசை
நடத்தியதின் பரிகாரம்..

*

எனக்கு தெரியும் சொல்லிய காதலை
விட சொல்லாத காதலே சிறந்தது என்று..
உன்னிடம் சொல்லிவிட்டு நான்
காதல் அவஸ்தை படுவதை விட
சொல்லாமலே போய்விடுகிறேன்..

*

மீண்டும் ஒரு ஜென்மம் ஒன்று இருந்தால்
தயவு செய்து எனது காதலியாக இருந்து விடாதே.
பாவம் நான்...காதல்...சாதல்....

சற்று முன் கிடைத்த தகவல் படி.!



சற்று முன் கிடைத்த தகவல் படி
வானிலை அறிக்கை நிலை மாறிவிட்டதாம்.
மழை வராது என்று உறுதி செய்து
கன மழை பெய்யவைத்து விட்டாயே..
உன்னை யார் கோப பட சொன்னது..?



மழை
வராத நேரத்தில் எல்லாம்
குடை பிடிக்க நேரிடுகிறது.எனக்கு
நீ இருக்கும் தைரியத்தில்...




மழைநீர் சேகரிப்பு மையம் அதிகரித்து
விட்டதாம்.. நீ மழையில் நனைவதால்..




நீ மழையில் நனைவதை பார்த்துவிட்டு
அனுமதி பெறாத மழை துளிகள் எல்லாம்
விடுபட்டு வந்து உயிர் இழக்கிறது உன்னிடம்..
காரணமே தெரியாமல்..




உன்னை பார்ப்பதற்கு முட்டி மோதி கொண்டு
கார்மேகங்கள் வருவதனால் தான்
இடி உருவாகின்றதோ..?

காதல் அலை..

நமது முதல் சந்திபிற்க்கு இந்த
அலை தான் முதல் சாட்சியாக வைக்கிறேன்..
என் காதல் டைரியில்..


உன்னை யார் அன்று அந்த அலையில்
காலை நனைக்க சொன்னது.. பார்த்தாயா...?
இன்று அது தினமும் உன்னை தேடி கரை வரைக்கும்
வந்து செல்கிறது... அடி பாவி..அந்த அலையையே...
அலைய வைத்து விட்டாயே..என்னை பொறுத்த
வரை.. அலையின் காதலும்.. என்னை போல் தான்...


அது என்னவோ தெரியவில்லை... கடற்கரையில் நான்
உனக்கு கொடுத்த முத்தம் எல்லாம்.. இன்று எனக்கு
இந்த அலை கொடுக்கிறது.. நான் மட்டும் தனிமையில்.
உனது காதலன்.......அலையுடன்.


ஆண் அலையும்.. பெண் அலையும்..
ஒன்றை ஒன்று பிடித்து கொள்ள ஓடி பிடித்து
விளையாடியது போல்.. நாமும் விளையாடிய காலங்கள்..
எங்கே..? ஞாபகம் இருக்கிறதா உனக்கு..?

காதல் பேருந்து

பேருந்தில்.. பயணித்து சென்று நான்
இறங்குகையில்..மீதம் இருப்பது
உன் நினைவுகள் தான்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

மீண்டும் மீண்டும் பயணிக்க தோன்றுகிறது..
உனக்கான நினைவுகளுடன்..

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

பேருந்துக்கு நீ காத்து இருக்கையில்..
திசைகாட்டி பலகை
கூட திரும்பி பார்க்கிறது உன்னை...

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

காதலை சொல்ல சொல்ல நான்
வந்து செலலும் அந்த பேருந்து எனக்கு
காதல் பேருந்தே..

நிலவு

இந்த
நிலவுக்கு
நீதான் மாற்றுப் பெண்.
அமாவாசை நாளில்
மறக்காமல் வந்துவிடு.
அலைந்து கொண்டிருப்பார்கள்
கவிஞர்கள்
உன்னைப் பார்க்க
இந்த
நண்பனைப்போல்.

வாழ்நாள் அனுமதி

நாம் சந்தித்த நாள்
நினைவில்லாமல் போகலாம்.
அனால்
பிரியும் நாள் மறக்காது.
அதற்காக
இந்த நண்பனுக்கு
ஒரு அனுமதிப் பத்திரம்
எழுதிக்கொடு,
நீதான்
என் வாழ்நாள் தோழன் என்று.

நட்பை நிர்பந்திக்காதீர்

என் தோழி
மற்றவர்களுக்கு
நல்ல தோழியாக இருப்பதை
நான் விரும்புகிறேன்.
ஆனால்
சிலர் தங்களுக்கு மட்டுமே
தோழியாக இருக்க வேண்டுமென
அவளை நிர்பந்திப்பது தான்
வருத்தமளிக்கிறது.

அங்கீகாரம்

நீதான்
என் நெருங்கிய தோழி.
நான் தான்
உனக்கு
சிறந்த தோழன் என
நமக்குள்ளே பேசிக்கொண்டிருக்கிறோம்.
எப்படி இருந்தாலும்
நம் நட்பை
அங்கீகரிப்பது
வரப்போகும் உன் கணவர் தானே.

வருத்தாமல் நட்பு கொள்வோம்

பூக்கள்
மென்மையானவை.
அதன் மீது
வாழும்
பனித்துளி
தூய்மையானது.
நல்ல நட்பைப்போல்.
பூவிடம்
தேனை கொள்ளையடிக்க வரும்
வண்டு ,
பூவை பறிக்காமல்
நட்பு பாராட்டி செல்வதே
உண்மை நட்பு.

மானுடம் வாழ

இந்த
பூமி
நிலை இல்லாமல்
இருக்கிறது.
சூரியனின்
ஆயுள்
குறைந்து கொண்டே
வருகிறது.
மனிதன்
மனம்
மாறி வருகிறான்.
உறவுகளில்
நிம்மதி குறைகிறது.
எனவே
மானுடம் வாழ
நட்பு
கொள்வோம்
ஒருவரோடு ஒருவர்.

உன்னைப் போலவே

ஆபத்துக் காலத்தில்
அறியலாம்
நல்ல நண்பர்களை
என்பார்கள்.
நான்
கஷ்டப் படும்போது
தன்னை
அடகு வைத்துக் கொண்டு
எனக்கு உதவியது
நீ
பரிசளித்த
மோதிரம் .

என் விருப்பம்

எனக்கொரு
பழக்கம்.
பிடித்தமானவைகளை
என்னருகே
வைத்துக்கொள்வது.
ஆதலால்
தோழி
விட்டுவிடாதே,
என்
கையை மட்டும்
எப்போதும்.

ஒரே சிந்தனை நமக்கு

நான்
நினைக்கிறேன்.
நமக்குள்
நீ
பெரியவள்
நான்
பெரியவன் என்ற
எண்ணம்
வருவதில்லை
என்பதால் தானோ
இன்னும்
பிரியாமல் இருக்கிறோம்
நல்ல
நண்பர்களாகவே.

வரம் வேண்டி

சாகாவரம்
பெறவில்லை
நாம்
இருவரும்.
ஆனால்,
உன்னாலும்
என்னாலும்
சாகாவரம் பெற்றது
நம் நட்பு.
என்
மனைவிக்கு அடுத்து
எனக்கு
நம்பிக்கையளிக்கும்
உன் நட்பு
தொடரட்டும்
எப்போதும்.

சுவாசம் நீ

உன்
அருகில் இல்லை
நான்.
ஆனாலும்
நான்
சுவாசிக்கும்
காற்றில்
கலந்திருக்கிறாய்
எப்போதும்
நீ
என்னுடன்.

நல்ல வாய்ப்பு

விளக்கு
வெளிச்சத்தில்
படித்த
நாட்களின்
அருமை
இன்று தெரிகிறது.
அதை
வெறுத்திருந்தால்
இழந்திருப்பேன்
உனக்கு
முதல் நண்பனாகும்
வாய்ப்பை.
Posted by Ni

புதுப்பித்தல்

நீண்ட நாட்களாகிறது
நாம்
பேசிக்கொண்டு.
நேரில் பார்த்தால்
ஒரு
புன்னகை போதும்.
புதுப்பித்துக் கொள்வோம்.
நம் நட்பை.