குழந்தை தொழிலாளர்
ஓலைக்குடிசை ஓட்டை
வழியே எட்டிப் பார்த்து
தம் வீட்டினுள் நிலவை
சிறைபிடிதோம் என்று
குதூகலிக்கும் குட்டிக்
குன்றுகளை மண்வெட்டியால்
மட்டப்படுத்தும் மானுடங்களே
உங்களின் மனம் பிணமாகிப் போயிற்றோ?
பிஞ்சு கைகளில்
நஞ்சை தடவி
பணியில் பிணிக்கும்
சூட்சமன்களே...
பிஞ்சுகள் ஒரு முறை
தீண்டினால்,
சூட்சமங்கள்
வீழுமடா....
உன்னுடைய பசிக்கு
ஏன் அரும்புகளின்
இரத்தத்தை உறிஞ்சுக்
குடிக்கிறாய்?
உன் தாகத்திற்கு
அவர்களின் வியர்வைதான்
தண்ணீர் குளமா?
உங்களால்தான்
அவர்களைக்கண்டாலே
சரஸ்வதி,
வெண்டாமரையை
படகாக்கி, வீணையை
துடுப்பாக்கி விலகி
விரைகிறாள்....
பட்டாம்பூசிகளாய்
சுற்றித் திரியும்
சிட்டுகளைச் சிறைபிடித்து
பட்டாசுகளுக்கு
பந்திவைக்கிறீர்களே?
திக்கெட்டும் தித்திக்கும்
அத் தீபாவளிகளை
சிறு தீப்பெட்டிக்குள்
சிறைவைக்கும்
சிற்றின்பம் என்னவோ?
அனுதினமும் உங்கள்
அடுப்பெறிய அவர்களின்
வீட்டுக் கூரைகளை
வேய்வது என்ன வாடிக்கை?
அடுப்பினுள் சிக்கிக்
கரியோடு சாம்பலாகும்
அந்த கண்ணன்களுக்கு
புல்லாங்குழல்
ஊதவேண்டம்...
அவர்களின் மூச்சுக்குழலை
புண்ணாக்காமல் இருந்தால்
போதும்.......
No comments:
Post a Comment