
ஒவ்வொரு இதழும்..
உன் நினைவை கொண்டு வருகிறது ...
ஒவ்வொரு நாளும்..
நீ என்னை பார்த்து..
உன் உதட்டை அசைத்து பேசும் போது..
என் கவிதைகள் அழிந்தாலும்
என் காதல் பொய்யானாலும்
உன்னை நினைத்தே என் உருவம் சிதைந்தாலும்
உன்னால் நான் அடைந்த
அனுபவங்கள் அனைத்தும்
என் உயிரின் ஆணி வேரில்
என்றும் எழுதி இருக்கும்..
தூக்கம் என்னை தழுவும் போதும்
நினைவாக நீ வருகிறாய் ..
கண் மூடினால் நீ மறைந்து விடுவாய்-என்று
எண்ணிய என் கண்கள் மூட மறுக்குது.
கண்ணில் இருக்கும் நீ
எப்படி என் கண்ணீரானாய்.
கண்மணியே கரைந்து விடாதே!
என் கண்ணுக்குள் என்றும் இருந்து விடு
என்றும் உன்னை நான் காண ...