Sunday, June 12, 2011

சொல் எப்படி என்று..?

உன்னோடு பேசும் போது மட்டும்
என் பூ முகத்தில்
ஆயிரம் புன்னகை பூக்கள்
ஓரே நேரத்தில்
பூக்கின்றனவே அதெப்படி..?

உன்னோடு உரையாடும் போது மட்டும்
மண்ணென்றும் கல்லென்றும்
பாராமல் என்
மென்தண்டுக் கால்கள்
தானாக கோலமிடுகிறதே அதெப்படி..?

உன் கண்ணோடு பேசும் போது மட்டும்
என் கண்களிரண்டும்
கருவண்டை மறைக்கும்
வண்ணத்துப் பூச்சி போல்
மிக வேகமாக படபடக்கிறதே அதெப்படி..?

உன்னோடு பேசும் போது மட்டும்
என் முகம் மதி மயக்கும்
மாலை நேரத்து
அடிவானச் சூரியனாய்
சிவந்து போகிறதே அதெப்படி..?

எப்படி எப்படி என்று
உன்னிடத்தில் எதைக் கேட்டாலும்
குழந்தைச் சிரிப்பை
பதிலாகத் தருகிறாயே..?
அதையேனும் சொல் எப்படி என்று..?

No comments:

Post a Comment