போறேன் என்றாய்!
போ என்று பொய் சொன்னது என் உதடுகள்.
பொய் சொன்ன என் உதடுகளை பாக்க மறந்த உன் கண்கள்.
அதை தினம் நினைத்து ஏங்கும் என் மனம்.
நீ சென்ற பாத சுவடுகளை தினம் தினம் பார்த்து
கண்ணீர் விடும் என் கண்கள்
உன்னோடு கை பிடிக்க காத்திருந்த என் கைகள்.
உன்னை நினைத்து தினம் தினம் கவிதை
எழுத துடிக்கும் என் கை விரல்கள் ..
அந்த கவிதையை படிக்க ஏங்கும் என் உதடுகள் .
உன் வரைவை எதிர் பார்த்து ஏங்கும் என் மனம் ,
உன் காதலை சுமந்து குடி இருக்கும் என் இதயம் ..
உன்னோடு சேர்ந்து நடக்க காத்திருக்கும்
என் கால்கள் ..
அந்த ஜோடி தடங்களை ஆசையாக பருக
காத்திருக்கும் என் கண்கள்.
காத்திருக்கும் என் கண்களை தவிக்க விடாதே .
தந்குவதுக்கு சக்தி இல்லை ..
ஏங்கி தவிக்கிறேன் உன்னை நினைத்து ..
ஒரு முறையாவது வந்து புன்னகைத்து விட்டு சென்று விடு ..!!!!!
No comments:
Post a Comment