Saturday, June 25, 2011

உன் காதல் !!!

நீ இருக்கும் வரைக்கும் தான்
உன் நினைவுகள் என்று எண்ணி விட்டாயோ!
நீ சென்ற பின்பும்
உன் நினைவுகள் என்னுள் இருக்கும்
உன் காதல் பாதம் பதித்த என் இதயத்தில்.

பூக்கள் தூவி உன்னை வரவேற்க வில்லை
புன்னகை தூவி தான் வரவேற்றேன்.
என் புன்னகையை மட்டும் ரசித்தவளே!
ஏன் இன்று மட்டும்
புன்னகை பூத்த வதனத்தை
சோகம் பூச வைத்து விட்டாய்.

நீ செல்லும் போது.
உன் நினைவுகளை தந்து விட்டு-கைமாறாய்
என் புன்னகையை பெற்று கொண்டாய் .
உன் நினைவுகள் என் புன்னகையை விட
சந்தோசம் தருகுதடி எனக்கு .!!

No comments:

Post a Comment